தமிழகத்தில் தற்போது வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து, கடலோரப் பகுதியிலும் இலங்கையின் வடக்கு பகுதியில் மன்னார் வளைகுடாவை ஒட்டிய கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல காற்று சுழற்சியின் காரணமாக நவம்பர் 1, 2, 3, 4 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
தொடர் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து, கடலோரப் பகுதியிலும் இலங்கையின் வடக்கு பகுதியில் மன்னார் வளைகுடாவை ஒட்டிய கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல காற்று சுழற்சியின் காரணமாக நவம்பர் 1, 2, 3, 4 ஆகிய தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க;- தமிழகத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை ? முழு விபரம் இதோ !

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், சாலைகளில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தொடர் மழை காரணமாக தஞ்சை, மயிலாடுதுறை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க;- நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..? சென்னையில் அடித்து ஊற்ற போகும் கனமழை.. வெதர் அப்டேட்