மக்களே தப்பி தவறிகூட வெளியே வந்துடாதீங்க.. 5 நாட்களுக்கு வெயில் கொளுத்தப் போகுதாம்..!
மார்ச் 23ம் தேதி முதல் 24ம் தேதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது, ஓரிரு இடங்களில் அதிக அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: இன்று முதல் வரும் 29ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மார்ச் 23 தேதி முதல் 27ம் தேதி வரை தமிழ்நாட்டுல் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜிம்முக்கு வரும் பெண்களை ஜம்முன்னு கரெக்ட் செய்த மிஸ்டர் வேர்ல்ட்! அடங்காத சேட்டை! யார் இந்த மணிகண்டன்?
மார்ச் 23ம் தேதி முதல் 24ம் தேதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது, ஓரிரு இடங்களில் அதிக அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
இதையும் படிங்க: School College Holiday: பங்குனி உத்திர திருவிழா.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்!
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), கன்னியாகுமரி (கன்னியாகுமரி). காயல்பட்டினம் (தூத்துக்குடி) தலா 5, ஊத்து (திருநெல்வேலி), தக்கலை (கன்னியாகுமரி). இரணியல் (கன்னியாகுமரி), மாஞ்சோலை (திருநெல்வேலி) தலா 2, ராதாபுரம் (திருநெல்வேலி), லைசேகரப்பட்டினம் (தூத்துக்குடி). அடையாமடை (கன்னியாகுமரி). அழகரை எஸ்டேட் (நீலகிரி) 1, பழைய தாலுகா அலுவலகம் ஸ்ரீவைகண்டம் (தூத்துக்குடி) தலா 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.