தமிழகத்தின் 16 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை கடந்துள்ளது. 

தமிழகத்தின் 16 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை கடந்துள்ளது. தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெயிலின் தாக்கல் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கி சில நாள்களாக மழை பெய்தது. எனினும் அதற்கடுத்தடுத்த நாள்களில் வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. அந்த வகையில் தமிழகத்தின் 16 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

இதையும் படிங்க: கள்ளச்சாராயம் குடித்து 9 பேர் பலியான சம்பவம்... அதிரடி நடவடிக்கை எடுத்த தமிழக அரசு!!

வேலூரில் அதிகபட்சமாக இன்று 108.14 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. அதேபோல் சென்னையில் 105.44 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. புதுச்சேரியில் 102.92 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. திருத்தணியில் 105.8 டிகிரியும், கரூர் பரமத்தியில் 104.9 டிகிரியும் பதிவாகியுள்ளது. இதேபோல், பரங்கிப்பேட்டையில் 104.36 டிகிரி வெயில் பாதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: 14 வருசத்துக்கு பிறகு.. மக்களின் உயிரோடு விளையாடும் முதல்வர் ஸ்டாலின்.. பாஜக தலைவர் அண்ணாமலை அட்டாக்

ஈரோட்டில் 103.64 டிகிரியும் மதுரை விமான நிலையத்தில் 103.28 டிகிரி வெயிலும் பதிவாகியுள்ளது. திருச்சியில் 103.1 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது. கடலூரில் 102.92 டிகிரி வெயிலும் மதுரை மற்றும் தஞ்சையில் 102.2 டிகிரி வெயிலும் பதிவாகியுள்ளது. பாளையங்கோட்டையில் 102.02 டிகிரியும், நாமக்கல் மற்றும் சேலத்தில் 100.4 டிகிரி வெயிலும் நாகையில் 100.04 டிகிரி வெயிலும் பதிவாகியுள்ளது.