தமிழக வரலாற்றில் முதல்முறையாக சிட்டிங் டிஜிபி ராஜேந்திரன் வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழக காவல்துறை  கடந்த 2017-ம் ஆண்டு ஆர்கே நகர் சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலின்போது, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடாக செய்ததாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, அவர் மீது குட்கா ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. அதன்பின், அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

புதுக்கோட்டையில் இருக்கும் அவரது வீடு, கல் குவாரி, கல்லூரி உள்பட 35 இடங்களில் நடத்திய சோதனையில் ரூ.85 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் மற்றும் நகைகள் சிக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதன்பின்னர், குட்கா ஊழல் வழக்கை சிபிஐக்கு  மாற்றி, டெல்லி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையொட்டி கடந்த சனிக்கிழமை அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னசாமியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 

அப்போது, தமிழக அரசுப் பணியில் வேலை வாங்கி தருவதாக கூறி, அமைச்சர் விஜயபாஸ்கரும், அவரது உதவியாளர்களும் பணம் பெற்றதாக என வாக்குமூலம் அளித்ததாக அதிகாரிகள் தெரிவித்னர்.  இந்நிலையில், சென்னை மற்றும் புதுக்கோட்டையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடுகள், மற்றும் அவர்களது நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையை தொடங்கியுள்ளனர். குறிப்பாக தமிழக காவல்துறையில், முதல்முறையாக டிஜிபி வீடு உள்பட 40-க்கு மேற்பட்டோர் வீடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனால், காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதேபோல் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வீட்டிலும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் வீட்டில் விருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  அப்போது, ஏராளமான ஆவணங்கள், பல கோடி நகைகள், பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு, கிரிஜா வைத்தியநாதன் புதிய தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.