சென்னை மாதவரத்தை அடுத்த செங்குன்றத்தில் உள்ள குட்கா குடோனுக்கு மாதவராவ் அழைத்து செல்லப்படுகிறார். சிபிஐ-ஆல் சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட மாதவராவ், தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.  தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பொருள் முறைகேட்டில் பல நூறு கோடி ரூபாய் அரசியல் விஐபிக்கள், உயரதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுக்கப்பட்டு, முறைகேடாக விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 

குட்கா ஏஜென்ட் மற்றும் புரோக்கரான செங்குன்றத்தைச் சேர்ந்த மாதவராவ், யார் யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுத்தோம் 
என்பதை, டைரியில் எழுதி வைத்துவிட்டு அனைவரையும் சிக்க வைத்து விட்டார். இந்த நிலையில்தான், அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் கமிஷ்னர் ஜார்ஜ், முன்னாள் அமைச்சர் ரமணா ஆகியோர் இல்லம் மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை நடைபெற்றது.

 

இந்த சோதனையின்போது பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.  அதன் தொடர்ச்சியாக தற்போது, சிபிஐ கஷ்டடியில் இருக்கும் மாதவராவை, செங்குன்றத்தில் உள்ள அவரது குட்கா குடோன்களுக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொள்ள சிபிஐ திட்டமிட்டுள்ளது.

இதற்காக மாதவராவை, சிபிஐ அதிகாரிகள், குட்கா குடோன்களுக்கு விரைவில் அழைத்து அழைத்து செல்ல உள்ளதாக தெரிகிறது. மாதாவராவின் குடோனுக்கு அழைத்து சென்று விசாரிப்பதில், மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என 
சிபிஐ நம்புகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்...! இன்னும் எத்தனை தலைகள் உருளப்போகும் என்று...!