துப்பாக்கிச்சூடு விசாரணை நேர்மையாக சுதந்திரமாக நடைபெற வேண்டும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தவறு செய்தவர்கள் இருதரப்பிலும் இருப்பதாகவும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி  கருத்து தெரிவித்துள்ளார். குட்கா வழக்கை போல் துப்பாக்கிச்சூடு வழக்கையும் ஏன் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கக்கூடாது என்று மீண்டும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். போலீஸார் மீது சந்தேகம் உள்ளபோது வழக்கை சிபிஐக்கு மாற்றுவதில் என்ன தயக்கம் என நீதிபதி வினவியுள்ளார். துப்பாக்கிச்சூடு வழக்கு தொடர்புடைய அனைத்து வீடியோ பதிவுகளையும் 3 வாரத்திற்குள் உயர்நீதிமன்றத்தில் தாக்க செய்ய வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். பிரேதப் பரிசோதனை அறிக்கை கோருவோருக்கு அளிக்க வேண்டும் என தலைமை நீதிபதி ஆணைப்பிறப்பித்துள்ளார். அரசு தரப்பு எதிர்ப்பு

துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூடு பற்றி விசாரிக்க தமிழக அரசே ஆணையம் அமைத்துள்ளது. மேலும் ஆணையத்தின் விசாரணை சரியான பாணியில் சென்று கொண்டிருப்பதாகவும் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார். விசாரணையில் உண்மை வெளிவரும் என்று அரசு தலைமை வழக்கறிஞர் உறுதியளித்துள்ளார்.துப்பாக்கிச்சூடு விசாரணை நேர்மையாக சுதந்திரமாக நடைபெற வேண்டும் எனக் கூறி வழக்கின் விசாரணை 3 வாரங்களுக்கு ஒத்திவைத்து தலைமை நீதிபதி அமர்வு உத்தவிட்டுள்ளது.   முன்னதாக துப்பாக்கிச்சூடு குறித்து சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் 6 பேர் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஜிம்ராஜ், மில்டன். சூரியபிரகாசம் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.