விருத்தாசலம் அருகே உள்ள வேப்பூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் திருமாறன் தலைமையில் விருத்தாசலம் கோட்டாட்சியர் தினேஷிடம் (பொறுப்பு) கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில், “வேப்பூரில் வசித்து வரும் 2 பெண்கள் தாங்கள் இருவரும் ஆதிதிராவிடர்கள் என போலி சான்றிதழ்கள் பெற்றுள்ளனர். இதனால் அவர்களுடைய போலி சான்றிதழ்களை இரத்து செய்ய வேண்டும்.

அந்த சான்றிதழ்களை வழங்கிய கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், தாசில்தார் உள்ளிட்ட வருவாய் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மனுவை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர் தினேஷ் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.