Government Chief Justice Muthukumarasamy has resigned from the post due to ill health.
உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அரசு தலைமை வழக்கறிஞர் முத்துகுமாரசாமி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தமிழக அரசு தலைமை வழக்கறிஞராக இருந்த திரு. ஏ.எல். சோமையாஜி, பதவி விலகியதைத் தொடர்ந்து, மூத்த வழக்கறிஞர் திரு. ஆர். முத்துகுமாரசாமி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
மூத்த வழக்கறிஞர் முத்துகுமாரசாமி 1994 ஆம் ஆண்டு தமிழக அரசின் சிறப்பு வழக்கறிஞராக செயல்பட்டு வந்தார். அதை தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு முதல் 2006 வரை தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞராக செயல்பட்டு வந்தார்.
தமிழக அரசுக்கு எதிராக உள்ள பல வழக்குகளை இவர் கையாண்டு வாதாடியுள்ளார். பேரறிவாளன் பரோலுக்கு இவர் அளித்த பரிந்துரையே ஒரு முக்கிய காரணம் எனவும் கூறலாம்.
இந்நிலையில் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியாது என கூறி தமிழக அரசுக்கு தனது ராஜினாமா கடித்தத்தை முத்துகுமாரசாமி அனுப்பியுள்ளார்.
இவரை தொடர்ந்து அடுத்த படியாக இந்த பதவிக்கு மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வழக்கறிஞர்கள் ராகவாச்சாரி, அரவிந்த் பாண்டியன் ஆகியோரின் பெயர்களும் பட்டியலில் உள்ளதாக கூறப்படுகிறது.
