வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவரை கத்தி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் நடந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைக்கும் மர்ம நபர்கள், அவர்களது வீட்டில் கொள்ளையடிப்பது மட்டுமல்லாமல், பெண்களை பாலியல் வன்கொடுமையிலும் செய்து வருகின்றனர். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்றுவிட்டு மர்ம நபர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சென்னை, ஆதம்பாக்கத்தில் வசித்து வருபவர் ஐரின். இவர் மணிப்பூரைச் சேர்ந்த இவர், வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, அவரது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், ஐரினை கத்திமுனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக, ஐரின் ஆதம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார். புகாரை பதிவு செய்த போலீசார், ஐரினை மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

மேலும், ஐரினை பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். வீட்டில் தனியாக இருந்த பெண்ணை, மர்ம நபர்கள் கத்திமுனையில் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.