குட்கா ஊழல் வழக்கில் சிக்கிய முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தனக்கும் குட்கா விவகாரத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என கூறினார். மேலும் தான் நேர்மையாக இருந்ததால், சில ஊடகத்தினர் இந்த விவகாரத்தை ஊதி பெரிது படுத்திவிட்டனர் என குற்றஞ்சாட்டினார். மேலும், தற்போது விழுப்புரம் எஸ்பியாக உள்ள ஜெயகுமார், பணியில் நேர்மையை பின்பற்றவில்லை. அவருக்கும் குட்கா விவகாரத்துக்கும் தொடர்பு இருப்பதைபோல் என கூறியிருந்தார். 

இந்நிலையில், எஸ்பி விஜயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, முன்னாள் கமிஷனர் ஜார்ஜ், தற்போது பணியில் இல்லை. அதனால், அவர் எதை வேண்டுமானாலும் கூறலாம். நான் இரவு பகல் பார்க்காமல் உழைக்கிறேன். என்னை பற்றி, பொதுமக்கள் மட்டுமே கூறமுடியும். அவர்களிடம் கேட்டு பார்க்கலாம். மக்கள் என் நேர்மையை அறிவார்கள். குட்கா விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. அதில் நான் கருத்து கூற விரும்பவில்லை என கூறினார். 

சென்னை மாநகர கமிஷனராக இருந்த ஜார்ஜ், பத்திரிகையாளர்களை சந்திப்பது என்பது பெரிய விஷயமாக இருந்தது. ஆனால், குட்கா விவகாரத்தில் மாதவராவ் கைது செய்யப்பட்ட உடனே அவர், பத்திரிகையாளர்களை சந்தித்தார். கடந்த 5 ஆண்டுகளில் பணியில் இருந்தபோது, எந்த கருத்தும் கூறாத ஜார்ஜ் தற்போது, காவல்துறையில் உள்ள அதிகாரிகள் மீது அடுக்கடுக்கான புகார் தெரிவிப்பது பொதுமக்களுக்ககே சந்தேகத்தை எழுப்புகிறது.