மதுரவாயிலில் வசித்து வரும் பிரபு பவானி என்கிற தம்பதியினருக்கு லோகேஸ்வரி என்கிற நான்கு வயது மகளும் பிரகதீஸ்வரன் என்கிற நான்கு மாத குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 22 ஆம் தேதி பிரகதீஸ்வரனை சேலையில் கட்டப்பட்ட தொட்டிலில் தூங்கவைத்துள்ளா ர் பவானி. இதற்கிடையில் குழந்தை தூக்கத்தில் அழுதுள்ளது. இதனால் குழந்தையை மீண்டும் தூங்க வைப்பதற்காக தாய் பவானி சேலையை பிடித்து வேகமாக ஆட்டியுள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக அருகில் உள்ள கட்டிலில் குழந்தையின் தலை மோதியுள்ளது.

இதனை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக அவ்வப்போது குழந்தை வலியால் அழுதுள்ளது. பின்னர் தலையில் வீக்கமும் அதிகரித்துள்ளது. பின்னர் வலியால் துடித்த குழந்தையை பார்த்த பெற்றோர்கள், பதறியபடி அருகில் உள்ள மருத்துவ மனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது. ஆனால் குழந்தை சிகிச்சை பலனின்றி  உயிர் இழந்தது.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியதில், குழந்தை கட்டிலில் மோதியதும், கடந்த இரண்டு நாட்களாக வலியால் அவதிப்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளளது. கவனக்குறைவு காரணமாக பெற்றோர்கள் கண்டு கொள்ளாமல் தாமதமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றதும் ஒரு காரணம் என தெரியவந்துள்ளது.