Asianet News TamilAsianet News Tamil

திருவள்ளூரில் திருட்டுத்தனமாக சாராயம் விற்ற நான்கு பேர் கைது; 133 சாராய பாட்டில்கள் பறிமுதல்..

Four arrested for selling liquor in Tiruvallur 133 bottles to be confiscated
Four arrested for selling liquor in Tiruvallur 133 bottles to be confiscated
Author
First Published Jun 22, 2018, 11:53 AM IST


திருவள்ளூர்

திருவள்ளூரில் திருட்டுத்தனமாக சாராயம் விற்ற நான்கு பேரை காவலாளர்கள் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 133 சாராய பாட்டில்களை பறிமுதல் செய்தனர்..

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி தாமரை ஏரி அருகே கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆய்வாளர் வரதராசன் தலைமையிலான காவலாளர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது, அங்கு மறைந்திருந்து இருவர் திருட்டுத்தனமாக சாராயம் விற்றுக் கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவலாளர்கள்  அவர்களை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். 

அதில், அவர்கள் தம்புரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி (40) மற்றும் சிந்தலக்குப்பத்தை சேர்ந்த சிவா (32) என்பது தெரியவந்தது. 

சுப்பிரமணியிடம் இருந்து 36 சாராய பாட்டில்களையும், சிவாவிடம் இருந்து 33 சாராய பாட்டில்களையும் காவலாளர்கள்  அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

இந்த சோதனை கும்மிடிப்பூண்டியை அடுத்த ஏடூர் கிராமத்திலும் தொடர்ந்தது. அங்கே தண்ணீர் தொட்டி அருகே திருட்டுத்தனமாக சாராயம் விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த டில்லிபாபு (25) என்பவரிடம் இருந்து 32 சாராய பாட்டில்களை காவலாளர்கள் பறிமுதல் செய்தனர். 

மற்றும் புதுவாயல் அருகே சாராய விற்பனையில் ஈடுபட்ட காரனோடையை சேர்ந்த அழகு (63) என்பவரிடம் இருந்து 32 மதுபாட்டில்களையும் காவலாளர்கள் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலாளர்கள் வழக்குப்பதிந்து நால்வரையும் கைது செய்தனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios