நடிகர் கமலஹாசனுடன் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக்குழுவினர் இன்று சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர். 

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சில தினங்களாக நடிகர் கமலஹாசன் தமிழக அரசுக்கு எதிராக பல குரல்களை விடுத்து வருகின்றார். 

மேலும் தமிழகம் முழுவதும் ஊழல் நிறைந்திருப்பதாக கமல் தெரிவித்ததையடுத்து அமைச்சர்கள் பொங்கி எழுந்தனர். 
இதைதொடர்ந்து தமிழகத்தில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் குரல் கொடுப்பேன் எனவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், நடிகர் கமலஹாசனுடன் இன்று மதியம் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக்குழு சுமார் 1 மணி நேரம் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். 

அப்போது தமிழக இயற்க்கை வளம், நீர் வளம் பாதுகாப்பது மற்றும் ஏரி, பாசன வடிகால்கள் பராமறிப்பது குறித்தும், விவசாயிகளையும், மண்ணையும் நேசிக்கும் பெருநிறுவனங்களை பயன்படுத்துவது, பாரம்பறிய விவசாய முறைகள், கால்நடை வளர்ப்பு, மரம் வளர்ப்பது உள்ளிட்டவைகள் குறித்தும் விவாதம் நடைபெற்றதாக விவசாயிகள் குழு தெரிவித்தனர். 

தேவை ஏற்படின் விவசாயிகள் விரோத நடடிக்கைகளை எதிர்த்து போராட்டக் களத்திற்க்கும் இணைந்து செல்வது என முடிவெடுக்கப்பட்டதாகவும், இதனடிப்படையில் விரைவில் அடுத்தக் கட்ட நகர்வுகள் தொடர உள்ளதாகவும் தெரிவித்தனர்.