வேலூர்

சல்லிக்கட்டுக்கு நிரந்த சட்டம் வேண்டும் என்று கடந்த ஆறு நாட்களாக அறவழியில் போராடி வரும் போராட்டக்காரர்களை காவலாளர்கள் வலுகட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைப் போலவே கோவை மாவட்டத்திலும், மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என அனைவரும் சல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் வேண்டும் என்று போராட்டத்தைத் தொடங்கி அறவழியில் போராடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு முதலே போராட்டக்காரர்களை அகற்றுவதில் காவலாளர்கள் பேச்சுவார்த்தை தொடங்கினர். பேச்சுவார்த்தை தோல்வியில் முடியவே, காவலாளர்கள் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தனர்.

கடும் வெயில், பனி, மழை கூட பாராது சல்லிக்கட்டுக்காக போராடிவரும் தமிழர்களை வலுகாட்டாயமாக வெளியேற்று வருகின்றனர் காவாலளர்கள். இதில், சிறு குழந்தைகள் முதல் முதியவர் வரை அனைவரும் அடக்கம்.

இந்த வெளியேற்றத்தின்போது, கலைந்து செல்ல மறுக்கும் மாணவர்கள், இளைஞர்கள் மீது தடியடி நடத்தி வெளியேற்றுகின்றனர்.