For students with disabilities special i-pad will be provided

தமிழகத்தில் உள்ள கற்றல், கேட்டல் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்காக (பெருமூளை வாத பாதிப்பு) பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சிறப்பு ஐ-பேட்களை மாவட்டந்தோறும் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இந்த சிறப்பு ஐ.பேட்கள் மூலம் ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடங்களை எளிதாக படங்கள், பேச்சு ஒலிகள் மூலம் மாணவர்கள் கற்க முடியும். இந்த சிறப்பு ஐ-பேட்களை மாநில சமூக நலத்துளை அமைச்சகம் மூலம் வினியோகக்கப்பட உள்ளன.

கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாத கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 31 ஆயிரத்து 517 மாணவர்கள் பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 4 ஆயிரத்து 31 மாணவர்கள் ஆட்டிசம் நோயினால் குறைபாட்டால் பாதிக்கப்பட்வர்கள் என தமிழக அரசு புள்ளிவிவரம் கூறுகிறது. இந்த இரு பாதிப்புகளில் சிக்கி தவிக்கும் மாணவர்களுக்கு இந்த சிறப்பு ஐ-பேட்கள் வழங்கப்பட உள்ளன.

இது குறித்து சமூகநலத்தறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ கற்றல், கேட்டல் குறைபாடு உள்ள இந்த மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட உள்ள சிறப்பு ஐ.பேட்கள் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வாங்கப்பட்டுள்ளன. சென்னை ஐ.ஐ.டி. மாணவர் அஜித் நாராயணன் என்பவரால் உருவாக்கப்பட்ட “ஆவாஸ்” எனும் மென்பெருள் பதிவுசெய்யப்பட்டுள்ளது. சந்தைவிலையில் இதன்விலை ரூ.25 ஆயிரமாகும்.

இந்த ஐ.பேடில் படங்கள், அதற்கான பெயர்கள், அதைத் தொட்டால், ஒலி மூலம் அதன் பெயரைச் சொல்லுதல் போன்ற சிறப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், எழுத்துகள் சிறிதாக இருந்தால், அதை பெரிதாக்கி பார்த்து படிக்கும் வசதியும் இதில் இருக்கிறது. ஜூன் மாதம் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. முதல் கட்டமாக 197 ஐ-பேட்கள் வழங்கப்படஉள்ளன. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாற்றத்திறனாளி மாணவர்களை அடையாளம் கண்டு முதலில் வழங்கப்படும். அதன்பின் படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.