Five goats died by dog bites People fear

திண்டுக்கல் 

திண்டுக்கல்லில் வெறி நாய்கள் கடித்ததில் ஐந்து ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. 

இந்தப் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேய்ச்சலுக்காக விடப்பட்ட கன்றுக் குட்டியை வெறி நாய்கள் கடித்து கொன்றுள்ளன. அதுமட்டுமின்றி ஆடு, கோழிகள் உள்பட கால்நடைகளையும், சாலையில் நடந்து செல்பவர்களையும் கூட இந்த வெறி நாய்கள் பாய்ந்து சென்று கடிக்கின்றன. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்..