ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாததால் காசிமேட்டில் மீன் வியாபாரம் பாதிப்பு

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாததால் சென்னை காசிமேட்டில் மீன் வியாபாரம் பாதிக்கபட்டுள்ளது.

சென்னையில் மீன் வியாபாரத்திற்கான முக்கிய இடம் காசிமேடு. இங்கு சாதாரணமாக மீன்கள் அதிக அளவில் மொத்தமாக விற்பனை ஆகும்.

பொதுமக்கள் குறைந்தபட்சம் 500/- முதல் 2000/- வரையும் வியாபாரிகள் குறைந்த பட்சம் 2000/- முதல் 20000/- ரூபாய் வரை மீன்களை கொள்முதல் செய்வார்கள். கடலில் பிடித்து வரும் மீன்கள் அப்படியே புதியதாக ஏலம் விடப்படும்.

ஆனால் 500,1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் விற்பனை கடும் பாதிப்பு ஏற்பட்டது.

மக்களிடம் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை பெறவும், பொருள் வாங்கவும் முடியவில்லை என வியாபாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். 
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி நேற்று அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.