தமிழக சிறைத்துறையில் முதன்முறையாக சிறைக் காவலர்களுக்கான குறைகேட்புக் கூட்டம் சென்னை எழும்பூரில் நடைப்பெற்றது.

எழும்பூரில் உள்ள சிறைத்துறை தலைமை அலுவலக வளாகத்தில் தமிழக சிறைத்துறையில் முதன்முறையாக சிறைக் காவலர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு சிறைத்துறை ஏடிஜிபி சைலேந்திரபாபு தலைமை வகித்தார். புழல் சிறைக் கண்காணிப்பாளரும், துணைத் தலைவருமான ஆ.முருகேசன் உள்பட ஆறு பேர் கொண்ட குழுவினர் கலந்தாய்வை நடத்தினர்.

இதில், தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் இருந்து 215 சிறைக் காவலர்கள் விருப்ப பணியிடமாற்றம் கோரி, மனு அளித்தனர். அவர்களில், மூன்று பெண்கள் உள்பட 141 பேருக்கு உடனடியாக பணியிட மாற்றத்துக்கான உத்தரவை ஏடிஜிபி சைலேந்திரபாபு வழங்கினார்.

முதன்முறையாக பணியிடமாற்றல் கலந்தாய்வு நடைபெற்றதால் சிறைக்காவலர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோல், சிறைத்துறை அதிகாரிகளுக்கான விருப்ப பணியிட மாற்றம் மற்றும் குறைகள் குறித்த கலந்தாய்வும் விரைவில் நடைபெறவுள்ளது என்பது கொசுறு தகவல்.