Fire crackers ...! Before you read it ...!
நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் பட்டாசு வெடிப்பது குறித்து சென்னை நகர போலீசார் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.

தீபாவளி என்றதுமே நம் நினைவுக்கு வருவது பட்டாசு, புத்தாடைகள், புதிய பலகாரங்கள்தான். பட்டாசு வெடிப்பதில் சிறுவர்களுக்கு அலாதி பிரியம்.
தீபாவளி அன்று புதிய ஆடைகளை அணிவதிலும் அவர்களுக்கு சந்தோஷம்தான்.

தீபாவளி பண்டிகை தொடங்க இன்னும் இரு தினங்கள் இருக்கும் நிலையில், வெளியூர் சென்று வேலை பார்ப்பவர்கள், தங்கள் குடும்பத்துடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாட ஊர் திரும்புவதில் உற்சாகம் அடைந்துள்ளனர். அது மட்டுமல்லாமல், குழந்தைகளுக்காகவும், குடும்பத்துக்காகவும் புது துணிகள், பட்டாசுகள் உள்ளிட்டவைகள் வாங்குவதில் பெற்றோர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் பேருந்துகள், ரயில்களில் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிப்பது தொடர்பாக சென்னை நகர போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
> காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
> பட்டாசுகளை மருத்துவமனை அருகிலோ, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலோ வெடிக்கக் கூடாது எனவும் கூறப்பட்டுள்ளது.
> குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது பெற்றோர்கள் அருகில் நின்று கொண்டு கவனித்துக் கொள்ள வேண்டும்.

> அதிக ஓசை எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
> போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவில் பட்டாசு வெடிக்கக் கூடாது
என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை சென்னை நகர போலீசார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம்
முழுவதும் 5,500 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், தீயணைப்புத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
