விருதுநகரில் தனியார் தீப்பெட்டி தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து காரணமாக அப்பகுயில் கரும்புகை சூழ்ந்து காணப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆலடிப்படியில் தனியார் தீப்பெட்டி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில், இன்று பிற்பகல் சுமார் 3.45 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

ஆலையில் தீ பரவியதை அடுத்து, அருகில் இருந்தோர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ மளமளவென்று எரிவதை அடுத்து அப்பகுதியை கரும்புகை சூழ்ந்துள்ளது.

தீப்பெட்டி தொழிற்சாலையில், யாரேனும் சிக்கி உள்ளனரா என்ற விவரம் தெரியவில்லை. ஆனாலும், தீயணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.