Finance Secretary Shanmugam seeks to destroy the farmers by ayyakkannu

நிதித்துறை செயலர் அய்யாக்கண்ணு விவசாயிகளை அழிக்க பார்க்கிறார் எனவும், 2 மணி நேரம் காக்க வைத்து விட்டு பார்க்காமல் சென்று விட்டார் எனவும் தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு சாடியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், நதிகளை இணைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர்மந்தரில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

அதில் மத்திய அரசு எந்த பதிலும் அளிக்கவில்லை. அதைதொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விவசாயிகளை சந்தித்து தமிழக அரசு உதவி செய்யும் என உறுதி அளித்தார். இதையடுத்து விவசாயிகள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர்.

இந்நிலையில் இன்று, அரசு செயலர்கள் வேளாண்துறை சுகன்தீப்சிங் பேடி, வருவாய்த்துறை சந்திரமோகன் ஆகியோரை சந்தித்து அய்யாக்கண்ணு மனு அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

நிதித்துறை செயலர் சண்முகம் விவசாயிகளை அழிக்க பார்க்கிறார்.

2 மணி நேரம் காக்க வைத்து விட்டு மனுவை வாங்காமல் திருப்பி அனுப்பி விட்டார்.

வேளாண்துறை சுகன்தீப்சிங் பேடி, வருவாய்த்துறை சந்திரமோகனிடம் மனு அளித்துள்ளோம்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உதகை சென்றுள்ளதால் வரும் 23 ஆம் தேதி வர சொல்லியுள்ளார்.

விவசாயிகளை அரசு அதிகாரிகள் மதிக்க வேண்டும்.

டெல்லி சென்று 300 விவசாய சங்கத்தினருடன் பேச உள்ளோம்.

இவ்வாறு அய்யாக்கண்ணு தெரிவித்தார்.