few doubts raised about inspector periyapandis death
சென்னை, கொளத்தூரில் நடந்த நகைக்கடை கொள்ளை தொடர்பாக ராஜஸ்தானைச் சேர்ந்த இரண்டு பேரை பிடிக்க மதுரவாயல் இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி, கொளத்தூர் ஆய்வாளர் முனிசேகர் தலைமையில் 6 பேர் கொண்ட தனிப்படை ராஜஸ்தான் சென்றது.
கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது, ஆய்வாளர் பெரியபாண்டியன் மட்டும் துப்பாக்கி சூட்டுக்கு பலியாகி வீர மரணம் அடைந்தார்.
தற்போது இவருடைய மரணத்தில் பல முக்கிய சந்தேகங்கள் எழுந்துள்ளது. இதன் அடிப்படையில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
1. கொள்ளையர்கள் இன்ஸ்பெக்டர் முனிசாமியின் துப்பாக்கியை எடுத்து பெரியபாண்டியனைச் சுடும்போது சக போலீஸார் என்ன செய்து கொண்டிருந்தார்கள் ?
2. கொள்ளையர்களை ஏன் சக போலீஸார் சுடவில்லை ?
3. உள்ளூர் போலீஸாரை அழைத்துக்கொண்டு ஏன் தமிழகப் போலீஸார் செல்லவில்லை ?
4. தமிழக போலீஸாரின் துப்பாக்கியை எடுத்து இன்ஸ்பெக்டர்களை கொள்ளையர்கள் சுடும் அளவுக்குக் கவனக்குறைவாக இருந்தது ஏன் ?
5. தற்போது அந்தத் துப்பாக்கி யார் வசமிருக்கிறது ?
6. பெரியபாண்டியனின் உடலில் எத்தனை குண்டுகள் இருந்தன. அவை முனிசேகரின் துப்பாக்கியிலிருந்துதான் சுடப்பட்டவைகளா ?
7. முனிசேகர் மற்றும் பெரியபாண்டியன் ஆகியோரிடம் மட்டும்தான் துப்பாக்கிகள் இருந்ததா ?
8. முனிசேகர் எப்படி படுகாயமடைந்தார் ? அதுபோல மற்ற காவலர்களுக்கும் எப்படி காயமடைந்தனர் ?
9. பெரியபாண்டி தற்காப்புக்காகத் தன்னுடைய துப்பாக்கியைப் பயன்படுத்தவில்லையா ?
10. முனிசேகரின் துப்பாக்கி கீழே விழுந்தது எப்படி? அது எப்படி கொள்ளையர்கள் கைக்குச் சென்றது ?
இதுபோன்ற பல சந்தேகக் கேள்விகள் போலீஸாரிடையே எழுந்துள்ளது. அதேநேரத்தில், பெரியபாண்டியன் மரணத்தில் ராஜஸ்தான் மாநில போலீஸாரும் முனிசேகர் வாக்குமூலமும் தமிழக போலீஸாரின் தகவலும் முரண்பாடாகவே இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் கூறப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது
மேல்குறிப்பிட்ட இந்த சந்தேகங்களுக்கு போலீஸ் தரப்பில் பதில்கள் இருந்தாலும் அவை திருப்திகரமாக இல்லை என இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியனுக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனராம்
எனவே விரைவில் இது குறித்த விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
