Fatherin law sent by daughter in law to daughter in law The cavity in the police

மருமகளுக்கு செக்ஸ் மெசேஜ் அனுப்பிய மாமனாரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தை சேர்ந்த அனிதா. கூடுவாஞ்சேரியை சேர்ந்த கபாலீஸ்வரன் என்பவரது மகன் தீபக்க்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு முதல் அனிதா மற்றும் அவரது கணவரின் செல்போன் எண்களுக்கு அனிதாவின் நடத்தை சரியில்லை என்றும், அவர் வேறு ஒருவருடன் தொடர்பில் இருக்கும் வீடியோக்கள் தன்னிடம் இருப்பதாகவும், அதனால் தூக்கில் தொங்கி விடு என மெசேஜ் வந்துகொண்டே இருந்தது.

இதனால், சந்தேகப்பட்ட கணவன் தீபக் அவரது மனைவி அனிதாவை அடித்துள்ளார் மேலும் இவர்களுக்கிடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், இவர்களின் விவாகரத்து பெற வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த நிலையில் அனிதாவின் செல்போன் எண்ணிற்கு மீண்டும் செக்ஸ் மெசேஜ் வந்து கொண்டே இருந்துள்ளது. இதுபற்றி அனிதா, கண்ணகி நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அப்போது அனிதாவின் செல்போனிற்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பியது மாமனார் கபாலீஸ்வரன் என்பது தெரியவந்தது.

இதையடுத்து கபாலீஸ்வரனை பிடித்து போலீசார் விசாரித்தபோது, புதிய செல்போன் எண் மூலம் பொய்யான மெசேஜ் அனுப்பி, மகனையும் - மருமகளையும் பிரித்ததும், தொடர்ந்து மருமகளுக்கு செக்ஸ் மெசேஜ் அனுப்பியது தெரியவந்துள்ளதயடுத்து கபாலீஸ்வரனை கைது செய்த போலீசார் செல்போனை பறிமுதல் செய்தனர்.