famous actor criticised the opinion of superstar
நேற்று தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்ட மக்களை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்திந்தார். இந்த சந்திப்பிற்கு பிறகு பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளித்த போது “ தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு காரணம் சமூக விரோதிகள் தான்” என கூறினார். அவரின் இந்த கருத்து பா.ஜ.க-வின் கருத்தை ஒத்திருக்கிறது.
ஸ்டேர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராடிய போராட்டத்தின் போது, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 அப்பாவி மக்கள் உயிர் பறி போகி இருக்கிறது. ஒரு ஜனநாயக நாட்டில் மக்கள் போராட்டத்தின் போது, துப்பாக்கி சூடு நடத்தியது எதன் அடிப்படையில்? அதுவும் துப்பாக்கி சூடு நடத்த வேண்டும் என்றால் அதற்கு என சில கட்டுப்பாடுகளும், விதி முறைகளும் இருக்கின்றன. அந்த விதிமுறைகள் எதுவுமே பின்பற்றப்படவில்லை இந்த சம்பவத்தின் போது.
இந்த கொடூர சம்பவத்தை கண்டித்து உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்திருக்கின்றனர். இது போன்ற தருணத்தில் ரஜினி இப்படி ஒரு பொறுப்பற்ற பதிலை கூறி இருப்பது மக்கள் தரப்பில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதனை விமர்சிக்கும் வகையில் பிரபல நடிகர் சித்தார்த், தனது டிவிட்டர் பக்கத்தில் பின்வருமாறு பதிவிட்டிருக்கிறார்.” இனி தூத்துக்குடியை இத்தனை காலமும் மாசு படுத்தியது கூட சமூக விரோதிகள் தான் என்பார்கள் இவர்கள்” என அதில் தெரிவித்திருக்கிறார் சித்தார்த். சித்தார்த்தின் இந்த கருத்தை அமோதிக்கும் வகையில் ரசிகர்களும், ரஜினியை டிவிட்டரில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
