Facebook lovers alaipayute style home without being married
திருநெல்வேலி
அலைபாயுதே பேஸ்புக்கில் காதலித்து. வீட்டுக்குத் தெரியாமல் திருமணம் செய்துகொண்டு அவரவர் வீட்டில் வசித்து வந்தது பெண் வீட்டிற்குத் தெரிந்ததும், காதலியை சித்திரவதை செய்வதாக காதலன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் லெட்சுமியாபுரம் இரண்டாம் தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் மாரிமுத்து (24). இவர் வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.
சங்கரன்கோவில் புதுமனை புதுத் தெருவைச் சேர்ந்தவர் ராமர் மகள் அருணா என்ற சரண்யா (24). இவர் பொறியியல் படித்த பட்டதாரி.
மாரிமுத்துவுக்கும்ம், அருணாவுக்கும் முகநூல் மூலம் ஏற்பட்ட பழக்கம் காதலாக மலர்ந்து இரண்டு ஆண்டுகளாகின்றன.
இந்த நிலையில் கடந்த 8–ஆம் தேதி மாரிமுத்துவும், சரண்யாவும் ஊத்துமலை சார்பதிவாளர் முன்னிலையில் பெற்றோர்களுக்குத் தெரியாமல் திருமணம் செய்துள்ளனர்.
மாரிமுத்து, தனக்கு சென்னையில் வேலை கிடைத்தவுடன் அங்கு சென்று விடலாம். அதுவரை இருவரும் அவரவர் வீடுகளில் இருப்போம் என்று கூறியுள்ளார். இதற்குச் சம்மதித்த சரண்யா திருமணம் முடிந்த கையோடு, தாலியை கழட்டி தனது பையில் வைத்துக்கொண்டு தயார் வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
பையில் இருந்த தாலியை பார்த்த சரண்யாவின் பெற்றோர், அவருடைய காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன் அவரிடம் இருந்த செல்போனையும் பிடுங்கி வைத்துக் கொண்டனர்.
இச்சூழ்நிலையில், கடந்த 17–ஆம் தேதி மாரிமுத்து சங்கரன்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், “எனது மனைவி சரண்யாவை, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் வீட்டிற்குள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியும், கட்டாயப்படுத்தியும் வேறு நபருக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறார்கள். எனவே அவர்களிடம் இருந்து சரண்யாவை காப்பாற்றி என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும்” என்று அந்த புகாரில் வேண்டிக் கொண்டார்.
அதற்கு ஆதாரமாக ஊத்துமலையில் சார்பதிவாளர் முன்னிலையில் சரண்யாவும், மாரிமுத்துவும் திருமணம் செய்து கொண்ட சான்றிதழ் நகல் மற்றும் புகைப்படத்தையும் காண்பித்துள்ளார்.
இதுகுறித்து சங்கரன்கோவில் மகளிர் காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
