சென்னையில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் வேலை செய்துவரும் பெண் ஒருவர் சிங்கப்பூரில் வசித்து வந்த வேலூரை சேர்ந்த மனோஜ் குமார் என்பவரிடம் காதல் வலையில் சிக்கி ஏமார்ந்து உள்ள விவகாரம் தற்போது வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஈக்காட்டுதாங்கலில் இயங்கிவரும் ஒரு தனியார் தொலைக்காட்சியில் வேலை செய்து வருகிறார் ராணி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது ) இவருக்கும் சிங்கப்பூரில் வேலை செய்து வந்த வேலூரை சேர்ந்த மனோஜ் குமார் என்பவருக்கும் சில மாதங்களாக பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்துள்ளது.

இவர்கள் இருவரும் நன்கு பேசி பழகி, வாட்ஸ்அப் மூலம் வீடியோ கால் என எதனையும் விட்டு வைக்காமல் காதல் வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நாடு திரும்பிய மனோஜ்குமார் காதலி ராணியை  சென்னையில் சந்தித்துள்ளார். இருவரும் பார்க், பீச், சினிமா என எங்கெல்லாம் பிடிக்குமோ அங்கெல்லாம் சென்று உள்ளனர்.

இதன் அடுத்த கட்டமாக இருவரும் திருமணம் செய்து கொள்ள போகிறோம் என்ற மனநிலையில் ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். அப்போது இருவரும் உல்லாசமாக இருந்துள்ளதாக தெரிகிறது. பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மனோஜ்குமாரை கேட்டுள்ளார் ராணி. ஆனால் இதற்கு மனோஜ்குமார் மறுத்துள்ளார். ஏன் எதற்கு என துருவித்துருவி கேள்வி கேட்க ஆரம்பித்த ராணிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது அப்போதுதான்.

மனோஜ்குமார் ஏற்கனவே திருமணமானவர் என்றும் தன்னால் உன்னை திருமணம் செய்துகொள்ள முடியாது என்றும் மறுத்துள்ளார்.பின்னர் செய்வதறியாது திகைத்து நின்ற ராணி,  வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. மேலும் இதற்கிடையில் மனோஜ்குமார் சிங்கப்பூருக்கு செல்வதற்கு ஆயத்தம் ஆகி உள்ளார்.

இந்த தகவல் தெரிய வரவே, மீண்டும் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு சென்று தனக்கு நீதி கிடைக்க வேண்டுமென போராடியுள்ளார் ராணி. இதுகுறித்து மனோஜ் குமாரை அழைத்து விசாரித்தபோது, தான் ராணியுடன் பழகியது உண்மைதான்.அவர் என்னிடமிருந்து நிறைய பணம், பொருட்களை வாங்கி உள்ளார். எனக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது என்ற செய்தி அவருக்கு தெரிந்தே தான் என்னுடன் பழகினார் என்றும் திட்டவட்டமாக தெரிவித்து ராணியை திருமணம் செய்துகொள்ள முடியாது என கூறியுள்ளார்.

இதனையடுத்து இருவரும் சமரசம் பேசி பிரிய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கூடா நட்பு கேடாய் முடியும் என்று சொல்வார்கள். அதற்கு உதாரணமாக இதுபோன்ற சம்பவங்கள் நாளுக்கு நாளுக்கு நிகழ்ந்து வருவதை  கண்கூடாக பார்க்க முடிகிறது.