திருவனந்தபுரத்தில் இருந்து கேரளா எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று இரவு புறப்பட்டது. அதிகாலை 12.30 மணியளவில் தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் ரயில் நிலையம் நோக்கி ரயில் சென்று கொண்டு இருந்தது.
அப்போது, சிக்னல் கிடைக்காமல் ரயில் நின்றது. அந்த நேரத்தில் அருகில் உள்ள காட்டு பகுதியில் திடீரென வந்த ஒரு மர்மகும்பல் ரயிலுக்குள் ஏறியது. அங்கு அயர்ந்து தூங்கி கொண்டிருந்த பயணிகள், மர்ம கும்பல் உள்ளே நுழைந்ததும் அதிர்ச்சியடைந்தனர். சிலர், அலறி கூச்சலிட்டனர்.
உடனே மர்மகும்பல், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை காட்டி, ரயில் இருந்த பெண்கள் உள்பட அனைத்து பயணிகளையும் மிரட்டி நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது.
தகவலறிந்து சேலம் மற்றும் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், உள்ளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். ரயிலில் ஏறிய மர்ம கும்பல், முகமூடி கட்டி இருந்ததாகவும், பயங்கர ஆயுதங்களை வைதது மிரட்டியதாகவும் பயணிகள் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து ரயில் அதிகாரிகளும் அங்கு வந்தனர். அப்போது, அங்குள்ள சிக்னல் கம்பத்தில் உள்ள மின்வயர் கேபிளை மர்மநபர்கள் துண்டித்துள்ளனர். பின்னர், சிக்னலுக்காக ரயில் நின்றபோது, கொள்ளையடித்தது தெரிந்தது.
மின்வயர் கேபிள் துண்டிப்பால், சுமார் 40 நிமிடம் ரயில், அந்த பகுதியிலேயே நின்றது. இதனால், கொள்ளை சம்பவம் நடந்தது தெரியவந்தது.