Asianet News TamilAsianet News Tamil

போலீசாரை அசிங்க அசிங்கமாக திட்டிய இளைஞர்; விலை உயர்ந்த பைக்கை தடுத்து நிறுத்தியதால் ஆத்திரம்!

நாகர்கோவிலில் போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போக்குவரத்து சிக்னல் உள்ளது.

Expensive bike; Traffic police Youth argument

நாகர்கோவிலில் போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போக்குவரத்து சிக்னல் உள்ளது. அவ்வழியாக வந்த இளைஞர் சுமார் ரூ.25 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த பைக்கில் செல்போனில் பேசியப்படி சென்றுள்ளார். Expensive bike; Traffic police Youth argument

அப்போது அங்கிருந்த காவலர்கள் தடுத்து நிறுத்த, அந்த இளைஞர் வண்டியை காவலரை இடிப்பது போல வந்து நிறுத்தியுள்ளார். இதையடுத்து அந்தப் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் சுரேஷ் வண்டியின் சாவியை எடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் காவலரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவரை தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் அந்த இளைஞர் தகாத வார்த்தையால் போலீசாரை திட்டியும் உள்ளார்.

இது குறித்து நேசமணி நகர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த இளைஞரை வலுக்கட்டாயமாக அங்கிருந்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில் அந்த இளைஞர் நாகர்கோவில் பகுதியில் உள்ள பிரபல துணிக்கடை உரிமையாளரின் மகன் ஸ்ரீநாத் என்பது தெரியவந்தது. இதையடுத்து ஸ்ரீநாத் மீது காவலரை பணி செய்ய விடாமல் தடுத்தது, அவதூறாகப் பேசி தாக்க முயன்றது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios