ex mp chezhiyan passed away
முதுபெரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரா. செழியன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
ரா.செழியன் 1923 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 ஆம் தேதி தஞ்சை மாவட்டம் திருகன்னபுரம் பகுதியில் பிறந்தார்.
இவர், அரசியல்வாதி, நாடாளுமன்ற உறுப்பினர், எழுத்தாளர் என பல தகுதிகளை கொண்டவர். மறைந்த அமைச்சர் நெடுஞ்செழியனின் தம்பியான இவர் மாணவர் காலத்திலேயே திராவிட இயக்கத்தில் சேர்ந்தார்.
திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டபோது அண்ணாத்துரையுடன் நெருக்கமாகப் பழகினார்.

1962 ஆம் ஆண்டு முதன்முதலில் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்றார். 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்றார்.
1977இல் தி.மு.க.விலிருந்து விலகி ஜனதா கட்சியில் சேர்ந்து இந்திய அரசியலில் ஈடுபட்டார். அப்போது நடைபெற்ற தேர்தலில் தோல்வி அடைந்தார். 1978 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.
1988 ஆம் ஆண்டு ஜனதா தளத்தில் செழியன் முக்கிய பொறுப்பு வகித்தார்.

இதைதொடர்ந்து ராமகிருஷ்ண எக்டே தலைமையில் லோக தளம் உருவானது. அக்கட்சியில் துணைத் தலைவர் ஆனார். 2001 ஆம் ஆண்டு அரசியலிலிருந்து விலகினார்.
இந்நிலையில் 94 வயதான செழியன் வேலூரில் இன்று உடல்நலக்குறைவு காரணமாக காலாமானார்.
