Employee with gun in tolgate Arrested for hitting journalists

விழுப்புரம் சுங்கசாவடியில் ஊழியர் ஒருவர் காரில் வந்த பத்திரிக்கையாளர்களை தாக்கியதால் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திருச்சியில் இருந்து 4 பத்திரிககையாளர்கள் விழுப்புரம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தனர். உளுந்தூர்பேட்டை சுங்கசாவடியில் ஊழியர்கள் கட்டணம் கேட்டுள்ளனர்.

அப்போது நேற்று இரவே போவதற்கும் வருவதற்கும் எடுத்துவிட்டோம் என பத்திரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் சுங்கசாவடி சீட்டையும் தேடி கண்டுபிடித்து கொடுத்துள்ளனர்.

ஆனால் சுங்கசாவடியில் வேலை பார்த்த ஊழியர்கள் சிலர் தகராறு செய்துள்ளனர். இதனால் இரு தரப்புக்கு வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நீண்டது.

இதைதொடர்ந்து அங்கு வேலைபார்க்கும் வடமாநில ஊழியர் ராஜேஷ் என்பவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.

இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் ராஜேஷை கைது அவரிடம் இருந்து துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

டோல்கேட் ஊழியர் துப்பாக்கியுடன் சுற்றி திரிவது அப்பகுதியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.