குழித்துறை,

மார்த்தாண்டத்தில் அனுமதி இல்லாமல் மது விற்ற எட்டு பேரை காவலாளர்கள் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 138 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மார்த்தாண்டம் மதுவிலக்கு பிரிவு காவல் உதவி ஆய்வாளர் சிவதாணு தலைமையில், காவலாளர்கள் மார்த்தாண்டம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுற்றுப் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அனுமதி இல்லாமல் மது விற்பனை செய்துக் கொண்டிருந்த எட்டு பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

அவர்களின் விவரம்:

அருமனை மாறப்பாடி கைப்பொற்றிவிளையைச் சேர்ந்த டென்சன் (49) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 90 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

காப்புக்காடு விளாத்திவிளையைச் சேர்ந்த விஜயகுமாரை (36) கைது செய்து, 10 மது பாட்டில்களும், சிதறால் தோட்டவாரம் செக்கிட்டவிளை ராஜகுமாரை (31) கைது செய்து 5 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கீழ்குளம் காட்டுவிளையில் தங்கராஜை (50) கைது செய்து, 2 மது பாட்டில்களும், மேக்கோடு மோசசை (53) கைது செய்து, 2 மது பாட்டில்களும், கழுவன்திட்டையில் காட்டுவிளை ஜஸ்டின் ராஜை (43) கைது செய்து, 10 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

மார்த்தாண்டம் மார்க்கெட்டில் கூடைதூக்கி கல் வெட்டான் குழியை சேர்ந்த பிரபாகரனை (55) கைது செய்து, 12 மது பாட்டில்களும், களியக்காவிளையில் திக்குறிச்சி மாவிளாகத்தை சேர்ந்த லூக்காசை கைது செய்து (60), 7 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மொத்தம் 8 பேரிடம் இருந்து 138 மதுபாட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைதான 8 பேரும், குழித்துறை முதல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர்.