Education status did not improve stalin

தமிழக அரசு, பிளஸ் 2 பொது தேர்வை கிரேடு நிலைக்கு மாற்றினாலும், கல்வி தரத்தை உயர்த்தவில்லை என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். சென்னை விமான நிலையத்தில் மு.க.ஸ்டாலின், செய்தியாளர்களிடம் கூறியதாவது.

தமிழகத்தில் தற்போது பிளஸ் 2 தேர்வு முறையை, ரேங்க் நிலையில் இருந்து கிரேடு நிலைக்கு தமிழக அரசு மாற்றியுள்ளது. இது வெறும் அறிவிப்பு மட்டுமே தவிர, இதில் ஒரு சாதனையும் அரசு செய்யவில்லை.

கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து அதன் தரத்தை உயர்த்துவதற்கு அரசு ஈடுபட்டால், பாராட்டாம். அதை செய்யலாம் என எதிர் பார்க்கிறோம்.

பல அரசு பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று இருக்கலாம். ஆனால், கல்வியின் தரம் உயர்ந்துள்ளது என கூறமுடியாது. படிப்பினால், மாணவர்களின் தரம் மட்டுமே உயரும். ஆனால், கல்வியின் தரம் உயரவில்லை. அரசு பள்ளியில் படித்து 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்க பாராட்டுகள், வாழ்த்துகள்.

பாஜக எம்பி பொன்.ராதாகிருஷ்ணனும், தமிழக மாநில தலைவர் தமிழிசையும், அவர்களின் சுய விளம்பரத்துக்காக திமுக தலைவர் கருணாநிதியின் வைர விழாவை பயன்படுத்துகின்றனர். இதற்கு நான் உடந்தையாக இருக்க மாட்டேன்.