சேலம் மாணவி வளர்மதி மீது ஏற்கனவே 6 வழக்குகள் உள்ளதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த காரணத்தால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

பெரியார் பல்கலைகழகத்தில் இதழியல் படித்துவரும் மாணவி சேலத்தை சேர்ந்த வளர்மதி. இவர், மீத்தேன்,ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிரான துண்டு பிரசுரங்கள் சேலம் அரசு மகளிர் கலை கல்லூரிக்கு அருகில் விநியோகம் செய்தார்.

இதனால் நக்சலைட்டுகளுக்கு ஆட்கள் சேர்ப்பதாக குற்றம் சாட்டி இவரை கடந்த 13 ஆம் தேதி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இவரின் மீது திடீரென குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. இதற்குஎதிர்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாணவி வளர்மதி மீது ஏற்கனவே 6 வழக்குகள் உள்ளதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்த காரணத்தால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.

சேலத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் மீது காலணி வீசியதாக மாணவி மீது வழக்கு உள்ளது. மக்களை தூண்டிவிட்டு கிளர்ச்சியை ஏற்படுத்துபவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என தெரிவித்தார்.

மேலும் மாணவர்கள் போராடினால் அவர்களின் படிப்பு கெடும் எனவும் எடப்பாடி தெரிவித்தார்.