லட்சத்தீவு கடல் பகுதியில் இன்று அதிகாலை 5.3 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
லட்சத்தீவின் கடல் பகுதிகளில் இன்று அதிகாலை 4.01 மணியளவில் மிதனமான நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், இது ரிக்டர் அளவில் 5.3 என பதிவானதாகவும் இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்தான தகவல்கள் உடனடியாக வெளியாகவில்லை.
கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், ஓரளவு இயல்பு நிலை உள்ளதாகவும், அதேவேளையில் குடியிருப்பு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தால், பொதுமக்கள் பாதிப்பு அடைந்து இருப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.
லட்சத்தீவு கடல் பகுதியில் திடீர் நிலநடுக்கம்
Latest Videos
