Asianet News TamilAsianet News Tamil

ஒரே நாளில் 27 அடி உயர்ந்தது சேர்வலாறு அணை - அடித்து நொறுக்கும் கனமழை 

Due to heavy rainfall in Southern Tamil Nadu the Damavalaru dam reached 27 feet in a single day at 148.62 feet.
Due to heavy rainfall in Southern Tamil Nadu, the servalaru dam reached 27 feet in a single day at 148.62 feet.
Author
First Published Nov 30, 2017, 7:47 PM IST


தென் தமிழகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக சேர்வலாறு அணை ஒரே நாளில் 27 அடி உயர்ந்து 148.62 அடியாக உள்ளது. மேலும் வினாடிக்கு 9,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 

கன்னியாகுமரி அருகே ஓகி புயல் உருவாகி உள்ளது. 60 கிலோமீட்டர் தொலைவில் ஓகி புயல் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக குமரியில் சூறைக்காற்றுடன் மழை பெய்துவருவதால் மரங்கள் முறிந்ததில் 319 செல்போன் கோபுரங்கள் செயல் இழந்துள்ளது. 

இதனால் தொலைதொடர்பு சேவை, போக்குவரத்து சேவை, மின்சார சேவையும் முடங்கி உள்ளது. மழை மேலும் அதிகரிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10-க்கும் மேற்பட்ட பேரிடர் மீட்பு குழுவினர் கன்னியாகுமரிக்கு விரைந்துள்ளனர். 

இந்நிலையில், கனமழை காரணமாக சேர்வலாறு அணை ஒரே நாளில் 27 அடி உயர்ந்து 148.62 அடியாக உள்ளது. மேலும் வினாடிக்கு 9,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. 

பாபநாசம் அணை 14 அடி உயர்ந்து 121.50 அடியாக உள்ளது. கொடுமுடியாறு அணை நிரம்பியதால் வினாடிக்கு 12 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்நிலையில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கைப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios