திருவாரூர் 

கடையில் குடிக்க கூடாது என்று கூறிய மாற்றுத் திறனாளி முதியவரை இரத்தம் வரும் அளவுக்கு அடித்த குடிகாரனை காவலாளர்கள் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தால் இப்பகுதியில் பரபர்பபு ஏற்பட்டது. 

thiruvarur க்கான பட முடிவு

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி, ஆலங்கோட்டை மேலத்தெருவில் வசிப்பவர் பாண்டியன் (55). இவர் நேற்று முன்தினம் இரவு சாராயம் வாங்கிக்கொண்டு அங்குள்ள சாலை ஒன்றில் நடந்து வந்துக் கொண்டிருந்தார். 

ஏற்கனவே முழு போதையில் இருந்த பாண்டியன் தன்னிடம் உள்ள சரக்கை குடிக்க இடம் பார்த்து வந்தார். அப்போது மாற்றுத் திறனாளியான மோகன்தாஸ் (60) என்ற முதியரின் சைக்கிள் பழுதுப் பார்க்கும் கடை அருகே வந்த பாண்டியன் கடைக்குள் உட்கார்ந்து சாராயத்தை திறந்து குடிக்க ஆயத்தமானார்.

drunker க்கான பட முடிவு

இங்கு சாராயம் குடிக்க குடிக்கக் கூடாது என்றும் பாண்டியனை கடையில் இருந்து வெளியே போங்கள் என்றும் கூறியுள்ளார் மோகன்தாஸ். இதில் ஆத்திரமடைந்த பாண்டியன், போதை வெறியில் மோகன்தாஸை சரமாரியாகத் தாக்கினார். அவரை இரத்தம் வரும் அளவுக்கு அடித்து உதைத்தார். பின்னர், அங்கிருந்து பாண்டியன் சென்றுவிட்டார்.

அந்தப் பக்கமாக வந்த வழிப்போக்கர்கள் மோகன்தாஸ் இரத்த காயத்தோடு இருப்பதைப் பார்த்து அவரை சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு வருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

blood க்கான பட முடிவு

இதுகுறித்த புகாரின்பேரில் மருத்துவமனைக்கு வந்த பரவாக்கோட்டை காவலாளர்கள் நடந்தது என்ன? என்று மோகன்தாஸிடம் விசாரித்தனர். பின்னர், இதுகுறித்து வழக்குப்பதிந்து பாண்டியனை தேடிக் கண்டுபிடித்து அதிரடியாக கைது செய்தனர்.

கடையில் குடிக்க கூடாது என்று கூறிய மாற்றுத் திறனாளி முதியவரை இரத்தம் வரும் அளவுக்கு குடிகாரன் அடித்து உதைத்த சம்பவத்தால் இந்தப் பகுதியில் பரபர்பபு தொற்றிக் கொண்டது.

arrest க்கான பட முடிவு