விராலிமலையில், வீட்டில் வளர்த்த நாய் ஒன்று, வீட்டில் நுழைய முயன்ற நாயை பற்காளால் கடித்து, தன்னுடைய உயிரை நீத்து குடும்ப உறுப்பினராய் தன்னை வளர்த்தவர்களுக்கு தன்னுடைய விசுவாசத்தை நிரூபித்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை காமராஜர் நகரை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவர் தனது வீட்டில் டாபர்மேன் இனத்தை சேர்ந்த, ஆறு வயதேயான பெண் நாய் ஒன்றை வளர்த்து வந்தார்.

சுரேஷ்குமாரும், அவரது குடும்பத்தாரும் அந்த நாயின் மீது அளவற்ற பாசத்தை காட்டி வளர்த்தார். தினமும், அந்த நாய்க்கு சாப்பாடு போட்டுவிட்டு, வெளியில் கட்டிப் போடுவது வழக்கம்.

செவ்வாய்க்கிழமை இரவும் அதேபோன்று கட்டிவிட்டு தூங்கச் சென்றுள்ளார். இரவு தூங்கிக் கொண்டிருக்கும்போது, திடிரென அந்த நாய் அதிக சத்தத்தோடு குரைப்பதை கேட்டு அலறி அடித்துக் கொண்டு சுரேஷ் குமார் வெளியே வந்து பார்த்தார்.

ஆனால், வீட்டின் வெளியே யாரும் இல்லை. இதனால் மறுபடியும் தூங்கச் சென்றார். பின்னர் நேற்று காலை எழுந்த சுரேஷ் குமார் நாயை பார்க்கச் சென்றார்.

வழக்கமாக சுரேஷ் குமாரைப் பார்த்ததும் ஆவலுடன் விளையாடும் அந்த நாய், நேற்று மௌனமாக படுத்துக் கிடந்தது. அருகில் சென்று பார்த்தபோது அந்த நாய் இறந்து கிடந்தது. அருகில் பாம்பு ஒன்றும் இறந்து கிடந்தது. இரவு வீட்டிற்குள் நுழைய முயன்ற பாம்பை நாய் வழிமறித்து அதனுடன் சண்டைப்போட்டு அந்த பாம்பை பற்களால் கடித்து கொன்று தன் உயிரை மாய்த்து கொண்டது.

பாம்பு வீட்டிற்குள் சென்றிருந்தால் குடும்பத்தில் யாரையாவது கடித்து உயிரிழப்பு ஏற்படும் என்பதை உணார்ந்து, தன் உயிரை மாய்த்து தான் வைத்திருக்கும் விசுவாசத்தை நிரூபித்துள்ளது.

இறந்து கிடந்த நாயின் உடலை பார்த்து சுரேஷ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். நாயும், சுரேஷும் ஒரே குடும்பத்தினர் என்ற உணர்வோடு பழகியுள்ளனர் என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது.