Asianet News TamilAsianet News Tamil

நோயாளிக்கு சிகிச்சை அளிக்காமல் கட்டிங் போட்டு தூங்கிய டாக்டர்...!

திருவையாறு அரசு மருத்துவமனையில், மது அருந்திவிட்டு போதையில் வந்த டாக்டர், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல், படுத்து தூங்கினார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Doctor who stabbed the patient without treatment
Author
Thanjavur, First Published Nov 8, 2018, 1:22 PM IST

திருவையாறு அரசு மருத்துவமனையில், மது அருந்திவிட்டு போதையில் வந்த டாக்டர், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல், படுத்து தூங்கினார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேற்று முன்தினம் நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. மேலும், பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையொட்டி பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் தீ விபத்து மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டது. Doctor who stabbed the patient without treatment

இதை தொடர்ந்து, தஞ்சை மாவட்டம், திருவையாறு அரசு மருத்துவமனையில், தீபாவளி பண்டிகையன்று, டாக்டர்  மகபூப் பாட்ஷா. என்பவர் பணியில் நியமிக்கப்பட்டார். அதன்படி இரவு பணிக்கு சென்ற மகபூப் பாட்ஷா, போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், ஒரு நோயாளிக்கும் அவர் சிகிச்சை அளிக்காமல்,  தனது ஓய்வறையின் கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டு தூங்கி விட்டதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில், விஷம் அருந்திய ஒருவருக்கு சிகிச்சைக்காகவும், அவரை அனுமதிக்கவும் டாக்டரின் கையெழுத்து அவசியம் என்பதால் அவரை, மருத்துவமனை ஊழியர்கள் செல்போன் மூலம் தொடர்பு கொண்டனர். ஆனால் அந்த டாக்டர், தனது பெயரை எழுதி கையெழுத்து போடும்படி அறிவுறுத்தினார். Doctor who stabbed the patient without treatment

அதே போல விபத்தில் சிக்கி மருத்துவமனைக்கு வந்த ஒருவருக்கு சிகிச்சை அளிக்க டாக்டர் மக்பூப் பாஷா வரவில்லை. இதையடுத்து அந்த நோயாளி வேறு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார் சென்றது. மேலும், அங்கு நடந்த சம்பவம் வீடியோ காட்சியாக பரவியது. இதையடுத்து, பணி நேரத்தில் போதையில் தூங்கியமருத்துவர் மகபூப் பாஷா மீது துறைரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதற்கிடையில், அவரை திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios