Asianet News TamilAsianet News Tamil

ரூபாய் நோட்டுல ”காந்தி” படத்த போடாதீங்க..! மனு போட்டவருக்கு 10,000 அபராதம்..!

do not print gandhi image in indian rupees case in high court
do not print gandhi image in indian rupees case in high court
Author
First Published Nov 13, 2017, 2:08 PM IST


இந்திய ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படத்தை அச்சிடக்கூடாது என வழக்கு தொடர்ந்தவருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

முருகானந்தம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், காந்தியின் படத்தை ரூபாய் நோட்டுகளில் அச்சிடக்கூடாது. கள்ள நோட்டுகள் அச்சிடப்படுகின்றன. கள்ள நோட்டுகளிலும் ரூபாய் நோட்டில் கிறுக்குவதாலும் காந்தியின் புகழுக்கு களங்கம் ஏற்படுகிறது. 

எனவே காந்தியின் புகழை கருத்தில்கொண்டு அவருக்கு புகழுக்கு களங்கம் ஏற்படாமல் தடுக்க, ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படத்தை அச்சிடக்கூடாது என கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், அரசியல் சட்டப்படி தீவிர ஆலோசனைக்குப் பிறகே ரூபாய் நோட்டுகளில் காந்தியின் படம் அச்சிடப்பட்டுள்ளது எனக்கூறி இதுபோன்ற மனுக்களைத் தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதற்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த மனுவை தாக்கல் செய்தவருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்து வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios