திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால், கோபாலபுரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

தி.மு.க. தலைவர் கருணாநிதி கடந்த சில ஆண்டுகளாக முதுகு வலி மற்றும் மூட்டு வலி பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார். கட்சி நிகழ்ச்சிகளுக்கும், பல்வேறு இடங்களுக்கு செல்லும்போது, சக்கர நாற்காலி மூலம் அவரை கொண்டு சென்றனர்.

கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டது. இதனால் அவர், எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். மேலும், கட்சி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் அலுவல்களை கவனிக்கும் பொறுப்பை திமுக பொது செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரிடம் ஒப்படைத்தார்.

இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியின் உடல் முழுவதும் கொப்பள்ங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால், அவருக்கு படுக்கவும் முடியாமல் ஆனது. இதையடுத்து அவருக்கு சிகிக்சை அளிக்க டாக்டர்கள், கோபாலபுரம் வீட்டுக்கு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் கோபாலபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்ததும், திமுக தொண்டர்கள் ஏராளமானோர், கோபாலபுரம் சென்ற வண்ணம் உள்ளனர்.