விழுப்புரம் அருகே ராக்கெட் பட்டாசு வெடித்து ஏற்பட்ட விபத்தில் 6 கூரை வீடுகள் தீயில் எரிந்து நாசமானது.

தீபாவளியை முன்னிட்டு விழுப்புரம் அருகே உள்ள இந்திரா நகர் பகுதியில் சிறுவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர்.

அப்போது, ராக்கெட் பட்டாசுகளை வெடித்தபோது, எதிர்பாராதவிதமாக அந்த பகுதியில் உள்ள பொன்னையன் என்பவரின் வீட்டின் கூரை மீது ராக்கெட் விழுந்து தீ பற்றி எரிந்தது. இந்த தீ மளமளவென வேகமாக பரவி மற்ற குடிசை வீடுகளுக்கும் பரவ தொடங்கியது.

இதையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர்.

தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த தீ விபத்தில் 6 கூரை வீடுகள் எரிந்து சாம்பலானது. மேலும், வீடுகளில் இருந்த டிவி, ப்ரிட்ஜ் உள்ளிட்ட 1௦ லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.