மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் திடீர் திருப்பம்... விசாரணை அதிகாரி அதிரடி மாற்றம்
தருமபுரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியை கைது செய்யாமல் மெத்தனமாக இருந்த போலீஸ் அதிகாரி முத்துகிருஷ்ணன் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியை கைது செய்யாமல் மெத்தனமாக இருந்த போலீஸ் அதிகாரி முத்துகிருஷ்ணன் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரி மாவட்டம் அரூர் அருகே சிட்லிங் மலைக் கிராமத்தைச் சேர்ந்த மாணவி பாப்பிரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். தீபாவளி தினத்தன்று சௌமியாயை 2 இளைஞர்கள் பலாத்காரம் செய்யப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது தொடர்பாக 2 பேர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.
இந்த சம்பவத்தில் போலீசார் மெத்தன போக்கால் குற்றவாளிகள் தப்பிக்கவிட்டதாகவும், மாணவி கற்பழிக்கப்பட்டதை வெளியில் சொல்லக்கூடாது என்று அந்த மாணவியின் பெற்றோரை போலீசார் மிரட்டியதாகவும் குற்றச்சாட்டி உள்ளனர். மேலும் போலீசாரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக சுற்றியுள்ள 24 கிராம மக்கள் திரண்டதால் பதற்றம் அதிகரித்தது.
எனவே பாதிக்கப்பட்ட மாணவியிடம் புகார் வாங்காமல் அலைக்கழித்த கோட்டப்பட்டி காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தினர். மேலும் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் மற்றும் குற்றவாளிகளை உடனே பிடிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காட்டில் தலைமறைவாக இருந்து வந்த சதீஷ் என்பவரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தலைமறைவாக இருந்து வரும் ரமேஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் கோட்டப்பட்டி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மாற்றப்பட்டு அரூர் மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் லட்சுமி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.