தருமபுரி திமுகவில் மாவட்ட செயலாளர் தர்ம செல்வன், ஆட்சியர் மற்றும் எஸ்.பி.யை மிரட்டும் ஆடியோ வைரலாகி உள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. உள்ளாட்சித் தேர்தல், மக்களவை தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெற்றது போல 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் வெற்றிபெறும் வகையில், கட்சியிலும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், நிர்வாக வசதிக்காகவும், சட்டப்பேரவை தேர்தல் பணிக்காகவும் திமுகவில் கடந்த சில நாட்களாக, புதிய மாவட்டங்கள் ஏற்படுத்துவது, ஏற்கனவே இருக்கும் மாவட்டங்களில் செயலாளர்களை மாற்றி விட்டு புதிய மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: விதிவசத்தால் முதல்வரான ஸ்டாலின்! மருத்துவ துறை சாதனைக்கு உங்க அப்பா தான் காரணமா? சொல்வது யார் தெரியுமா?
இந்நிலையில் தருமபுரி மாவட்ட திமுகவில் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளராக தடங்கம் சுப்பிரமணி, 2013ல் நியமிக்கப்பட்டார். கடந்தாண்டு கிழக்கு, மேற்கு என இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டன. இதில் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பாலக்கோடு சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய மேற்கு மாவட்ட செயலாளராக பழனியப்பன் நியமிக்கப்பட்டார். தருமபுரி, பென்னாகரம் தொகுதிகளை உள்ளடக்கிய கிழக்கு மாவட்ட செயலாளராக தடங்கம் சுப்பிரமணி இருந்தார்.
அவரது செயல்பாடுகள் நாடாளுமன்ற தேர்தலில் திருப்தி அளிக்காததால் தடங்கம் சுப்பிரமணியம் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக புதிய பொறுப்பாளராக தர்ம செல்வன் பிப்ரவரி 23ம் தேதி நியமிக்கப்பட்டார். நியமிக்கப்பட்ட சில நாட்களிலேயே மாவட்ட செயலாளர் தர்ம செல்வன் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி.யை மிரட்டும் ஆடியோ வைரலாகி அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஒரே ஒரு எலுமிச்சைக்கு இவ்வளவு போட்டியா? அப்படி என்ன ஸ்பெஷல்? எவ்வளவு ரூபாய்க்கு ஏலம் போனது தெரியுமா?
தருமபுரி கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தர்ம செல்வேன்: கலெக்டர், எஸ்.பி. உள்ளிட்ட அனைவரும் நான் சொல்வதை தான் கேட்க வேண்டும். நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் வேறு மாவட்டத்திற்கு மாற்றி விடுவேன். யாராக இருந்தாலும் நான் சொல்வதை நான் கேட்க வேண்டும் என மிரட்டும் வகையில் பேசியுள்ளார்.
