Asianet News TamilAsianet News Tamil

சிதம்பர கோவிலில் இனி இதற்கு அனுமதி.. தீட்சிதர்கள் போட்ட முட்டுக்கட்டை.. ரத்து செய்து அரசு போட்ட திடீர் உத்தரவு

கடலூர் மாவட்டம் சிதம்பர நடராஜர் கோவிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, நடராஜரான சபாநாயகரை தரிசிக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

Devotees can climb on the Kanakasabai at the Chidambaram temple and worship - Government order
Author
Chidambaram, First Published May 19, 2022, 9:56 AM IST

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,” சிதம்பரம்‌ நடராஜர்‌ கோயில்‌ பஞ்சபூத ஸ்தலங்களில்‌ ஆகாய ஸ்தலமாக விளங்கி வருவதால்‌ உலகெங்கிலும்‌ இருந்து பக்தர்கள்‌ பெருமளவில்‌ வருகை புரிகின்றனர்‌. இத்திருக்கோயிலில்‌ மூலவரே உற்சவராக எழுந்தருள்வது சிறப்பாகும்‌. அருள்மிகு சபாநாயகர்‌ வீற்றிருக்கும்‌ கனகசபை மண்டபத்தில்‌ பக்தர்கள்‌ அனுமதிக்கப்பட்டு சிதம்பர இரகசியத்தை தரிசிப்பது நடைமுறையில்‌ இருந்து
வந்துது. 

கொரோனா பெருந்தொற்று காரணமாக திருக்கோயில்களில்‌ பக்தர்களை அனுமதிப்பதற்கு அரசால்‌ வழங்கப்பட்ட அரசு வழிகாட்டி நெறிமுறைகளின்படி பக்தர்களிடமிருந்து பூஜை பொருள்களை பெறுதல்‌, அமர்ந்து தரிசனம்‌ செய்தல்‌ மற்றும்‌ அங்கபிரதட்சனம்‌ செய்தல்‌ ஆகியவை தவிர்க்கப்பட்டு வந்தது.

இந்நிலையில்‌, தற்போது கொரோனா தொற்று பெருமளவு குறைந்துள்ளதால்‌ வழிபாட்டு தலங்களில்‌ பக்தர்களுக்கு விதிக்கப்பட்ட தடைகள்‌ விலக்கப்பட்டு அனைத்து திருக்கோயில்களிலும்‌ ஏற்கனவே இருந்த வழிபாட்டு நடைமுறைகள்‌ மீண்டும்‌ தொடரும்‌ நிலையில்‌, இத்திருக்கோயிலை நிர்வகித்து வரும்‌ தீட்சிதர்கள்‌ கனகசபை மண்டபத்தின்‌ மீதேறி பக்தர்கள்‌ தரிசனம்‌ செய்ய தடை விதித்து தீர்மானம்‌ நிறைவேற்றயதாக பக்தர்கள்‌ தரப்பில்‌ பெரும்‌ ஆட்சேபனைகள்‌ தெரிவிக்கப்பட்டு வந்தது.

இதனைத்‌ தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்‌ மற்றும்‌ கடலூர்‌ இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்‌ ஆகியோரால்‌ விசாரணை மேற்கொள்ளப்பட்டு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகளின்‌ அடிப்படையில்‌, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி ஆகம விதிகளை பின்பற்றி பக்தர்கள்‌ தரிசனம்‌ செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும்‌, இந்து சமய அறநிலையத்துறை ஆணையரின்‌ கருத்துருவினை அரசு பரிசீலனை செய்து, நடராஜர்‌ கோயிலில்‌ தொன்றுதொட்டு நடைமுறையில்‌ இருந்து வந்த பழக்க வழக்கத்தின்படியும்‌, பக்தர்களின்‌ கோரிக்கைகளை கருத்தில்‌ கொண்டும்‌ கோயிலில் கனகசபை மீதேறி பக்தர்கள் வழிபட அனுமதி வழங்கப்படுவதாக அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அடிச்சு தூக்கும் விலை.. புதிய உச்சத்தை நோக்கி வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.!

Follow Us:
Download App:
  • android
  • ios