முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அறிந்த்தும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் மகிர்ச்சியடைந்தனர்.

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து ஆய்வு செய்ய டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் குழுவினர் மீண்டும் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தனர்.

கடந்த செப்டம்பர் 22ம்தேதி முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான்பீலே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள், சிங்கப்பூர் பிசியோதெரபி பெண் நிபுணர்கள் சிகிச்சை அளித்தனர். இதைதொடர்ந்து அவருக்கு பிசியோ தெரபி மூலம் உடற்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இதைதொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர் எப்போது விரும்பினாலும் வீட்டுக்கு செல்லலாம் என அப்பல்லோ தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.

இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையை குறித்து ஆய்வு செய்ய டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் குழுவினர் சென்னை வந்துள்ளனர்.

நேற்று அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்த டெல்லி எய்ம்ஸ் டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ் நாயக் ஆகியோர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், அவர் எடுத்துவரும் சிகிச்சை குறித்தும் அப்பல்லோ டாக்டர்கள் குழுவினருடன் கேட்டறிந்தனர். அப்போது, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அறிந்து, மகிழ்ச்சியடைந்தனர்.

பின்னர், சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்கள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எழுந்து நிற்கவும், நடக்கவும் தேவையான சிகிச்சை மற்றும் உடற்பயிற்சியை அளித்தனர்.