தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வலியுறுத்தி திருப்பரங்குன்றத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மற்றும் அவரது தந்தை காவலாளர்களால் கைது செய்யப்பட்டார்.
திருப்பரங்குன்றம் பூங்கா பேருந்து நிறுத்தம் அருகே இருக்கும் மதுக்கடை முன்பாக, தமிழகத்தில் இருக்கும் மதுக் கடைகளை மூட வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் இருக்கப் போவதாக பகத்சிங் இந்திய புரட்சி இயக்கம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் திங்கள்கிழமை காலை இந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், சட்டக் கல்லுரி மாணவியுமான ஏ.நந்தினி இயக்கத்தின் ஆலோசகரும் நந்தினியின் தந்தையுமான கே.ஆனந்தன் ஆகிய இருவரும் மதுவுக்கு எதிராகவும், மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் வாசங்கள் கொண்ட பதாகையை ஏந்தியபடி மதுக்கடைக்கு முன்பாக காலவரையற்ற உண்ணாவிரத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த திருநகர் காவல் இன்ஸ்பெக்டர் ஆனந்த் தலைமையிலான காவலாளர்கள் விரைந்துச் சென்று இருவரையும் கைது செய்தனர்.
