cycle rally with many demands by gov staffs
திருவாரூர்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் அரசு ஊழியர்கள் சங்கம் சைக்கிள் பேரணி நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி திருவாரூரில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் சைக்கிள் பேரணி நடந்தது.
இரயில் நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணிக்கு சங்க மாவட்ட தலைவர் பைரவநாதன் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி பேரணியைத் தொடங்கி வைத்தார்.
இதில் அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் சௌந்தரராஜன், மாவட்ட செயலாளர் சோம சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
இந்த சைக்கிள் பேரணி பேருந்து நிலையம், பனகல் சாலை, தெற்குவீதி, துர்க்காலயா சாலை வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சென்றடைந்தது.
இதில் பங்கேற்றவர்கள், “காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.
அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள ஆறு, குளம், நீர்நிலைகளை தூர்வாரி தண்ணீரை சேமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.
மீத்தேன், ஐட்ரோ கார்பன், ஷேல் கியாஸ் ஆகிய திட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டும்” உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
பேரணியில் இறுதியில் மாவட்டப் பொருளாளர் மூர்த்தி நன்றித் தெரிவித்தார்.
