கடலூர்   மாவட்டத்தில், ஒரு காருக்கு  அடியில்  மறைந்திருந்த   முதலையால்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அம்மாபேட்டை வி.கே.ஏ.நகர் பகுதியில்  கார்  ஒன்று  நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.இந்த காரின் அடியில் ஒரு முதலை பதுங்கி இருந்துள்ளது.இதனை  பார்த்த ஒரு நபர்  போது மக்களிடம் தெரிவிக்க, அந்த பகுதியே பெரும் பரப்பரப்பாக மாறியது. பின்னர் இந்த தகவலை அறிந்த வனத்துறையினர் அந்த முதலையை பிடித்து வக்காரமாரி குளத்தில் கொண்டு போய் விட்டனர்.

இதன் காரணமாக அந்த கிராமம் மட்டுமின்றி, சுற்றுவட்டார  பகுதிகளில்  உள்ள ஆறு குளங்களில் முதலை நடமாட்டம் இருப்பதால் பொது மக்கள் பாதுகாப்பாக  இருக்க வேண்டும் என்றும் , அதே  வேளையில் தங்கள்  பிள்ளைகளை  ஆறு குளம்  போன்றவற்றில்  குளிப்பதற்கு  அனுப்ப  வேண்டாம்  என வனத்துறை எச்சரிக்கை விட்டுள்ளது