நாட்டையே உலுக்கிய சிறுமி கொலை வழக்கு; தஷ்வந்த் தூக்கை உறுதி செய்த உயர்நீதிமன்றம் 

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளி தஷ்வந்துக்கு தூக்கு தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தஷ்வந்த் மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

சென்னை போரூரில் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஹாசினி என்ற 6 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக தஷ்வந்த் மீது கொலை, கடத்தல், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் மாங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த செங்கல்பட்டு நீதிமன்றம் பிப்ரவரி 19ம் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தூக்குதண்டனையை ரத்து செய்யக்கோரி தஷ்வந்த்  உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தான். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராமதிலகம், விமலா ஆகியோர், தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பு அளித்தனர். அவர் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.