3வது அலையா…? சமாளிக்க நாங்க ரெடி… அசால்ட் பண்ணிய மா. சுப்பிரமணியன்
கொரோனா 3வது அலை வந்தாலும் அதை சமாளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சேலம்: கொரோனா 3வது அலை வந்தாலும் அதை சமாளிக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றுகள் பரவலாக குறைந்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதே நேரத்தில் கொரோனா 3வது அலை குறித்து மருத்துவ வல்லுநர்கள் தொடர்ந்து தமிழக அரசை அலர்ட் செய்த வண்ணம் உள்ளனர்.
இந் நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இன்று மாலை 4 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்களில் கிட்டத்தட்ட 12.74 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா 3வது அலை வரக்கூடாது. அப்படியே வந்தாலும் அதை சமாளிக்க அனைத்து கட்டமைப்புகளும் தயார் நிலையில் உள்ளன. கூடுதலான படுக்கை வசதிகள், தேவைப்படும் மருந்துகள் தயாராக இருக்கின்றன.
கேரள எல்லை பகுதியில் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. போதிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன என்று கூறினார்.